ADDED : அக் 07, 2024 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கடம்பூர் வனச்சரகம் மொசல்மடுவு பகுதியில், மின் வேலியில் சிக்கி ஆண் யானை நேற்று இறந்து கிடந்தது. தகவலறிந்த கடம்பூர் வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர். மொசல்மடுவு சுப்பிரமணிக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பட்டகாரர் மணி குத்தகைக்கு எடுத்து சோளம் விதைத்திருந்தார். காட்டுப்பன்றிகள் நிலத்தில் புகுவதை தடுக்க மின் வேலி அமைத்திருந்தார்.
நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, சோளக்காட்டில் புகுந்தபோது மின்சாரம் தாக்கி பலியானது தெரிந்தது. இறந்த யானைக்கு, 35 வயதிருக்கும். கடம்பூர் போலீசில் மணி சரணடைந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடப்பதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.