/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்த பஞ்., ஊழியர் பலி
/
மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்த பஞ்., ஊழியர் பலி
மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்த பஞ்., ஊழியர் பலி
மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்த பஞ்., ஊழியர் பலி
ADDED : மே 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, எரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 42; விளக்கேத்தி பஞ்., தற்காலிக ஊழியர்.சுண்டம்பள்ளகாடு, ஓலப்பாளையத்தில் ஒரு மின் கம்பத்தில் விளக்கு எரியாததால், நேற்று மதியம் கம்பத்தில் ஏறி சரி செய்ய முயன்றார்.
அப்போது மின்சாரம் தாக்கி, 20 அடி உயர கம்பத்தில் சிக்கி சடலமாக தொங்கினார். மொடக்குறிச்சி போலீசார் அரை மணி நேரம் போராடி, கயிறு கட்டி சடலத்தை மீட்டனர். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர். பலியான பொன்னுசாமிக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.