தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை அவசியம்

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை அவசியம்

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை அவசியம்


ADDED : நவ 25, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: காலைக்கதிர், தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மற்றும் பேட்டியா சார்பில், பேட்டியா உறுப்பினர்கள், மக்களுக்கு, உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, கண்களை நேசி பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோடு பேட்டியா சக்தி மசாலா ஹாலில் நேற்று நடந்தது.

தி ஐ பவுண்டேஷன் பொது மேலாளர் டாக்டர் சக்தி ராஜேஸ்வரி, பேட்டியா தலைவர் ராஜமாணிக்கம், தி ஐ பவுண்டேஷன் மேலாளர் கிஷோர் குமார், காலைக்கதிர் ஆசிரியர் ராமச்சந்திரன், பொது மேலாளர் ஜெரால்டு ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.நிகழ்வில் பேட்டியா தலைவர் ராஜமாணிக்கம் பேசியதாவது:

காலைக்கதிர் நம் ஈரோடு வளர்ச்சிக்கும், உள் கட்டமைப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் செய்திகளை, அரசுக்கு எடுத்து செல்ல முக்கிய பாலமாக உள்ளது. காலைக்கதிரின் இச்செயல் பாராட்டுக்குரியது. ஈரோட்டில் உள்ள ஒரு பிரச்னையை தீர்த்து வைத்தது காலைக்கதிர் தான்.

ஓராண்டுக்கு முன் அரசு சார்பில் ஒரு மேப் போட்டிருந்தனர். அதில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், 80 அடி சாலை உள்ளிட்டவை இல்லை. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்ல இருந்தேன். அப்போது காலைக்கதிரில் மட்டும் இந்த செய்தி வெளியாகி இருந்தது. அதை அமைச்சர், அரசு செயலரின் கவனத்துக்கு கொண்டு செல்ல, மாலையிலேயே பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

தி ஐ பவுண்டேஷன் பொது மேலாளர் டாக்டர் சக்தி

ராஜேஸ்வரி பேசியதாவது:

கடந்த இரு வாரமாக கண்பார்வை குறித்து நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். நிறைய பேர் கண்ணில் தொந்தரவு என்றால்தான் கண் மருத்துவமனையை தேடி வருகின்றனர். கண் அனைவருக்கும் முக்கியமானது. தடுக்க கூடிய பார்வை இழப்பு என ஒன்று உள்ளது. அதற்காக தான் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதில் முக்கியமானது சர்க்கரை நோயால் வரும் விழித்திரை பாதிப்பு.

40 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு கிட்ட பார்வை குறைபாடு ஏற்படும். அப்போது கண் கண்ணாடி போட்டு கொள்வோம். 40 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு கண் புரை வருவது இயற்கையாக வரக்கூடியது. இதற்கான சிகிச்சை மிக எளிது. புரையில் இருக்கும் லென்சை மாற்றி விட்டு செயற்கை லென்சை வைத்தால், 100 சதவீத கண் பார்வை வந்து விடும். குளுகோமா எனப்படும் கண் நீரழுத்த நோயும், நோயின் கடைசி கட்டத்தில்தான் தெரிய வரும். எனவே, 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்ணில் நீர் அழுத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதே போல் தான் கண் விழித்திரை பாதிப்பும். சர்க்கரை நோயால் விழித்திரைக்கு பாதிப்பு ஏற்படலாம். இப்பிரச்னைக்கு முதல் 2 நிலைகளில் அறிகுறிகள் தெரியாது. இதற்கு முதல் நிலையிலேயே ஒரு சொட்டு மருந்தை விட ரத்தக்கசிவு பிரச்னை சரியாகி விடும்.

முகாமுக்கு இன்று வந்திருந்திருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூப்பன் கொடுத்திருக்கிறோம். கூப்பனில் வருபவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை செய்யப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு நவ., டிசம்பரில் சர்க்கரை நோயால் ஏற்படும் கண் பார்வை இழப்பை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு, பரிசோதனையை மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். மேலும் விபரங்களுக்கு டாக்டர் சக்தி ராஜேஸ்வரியை, 93601-22148, 93601-22147 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் பேட்டியா பொது செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். பேட்டியா நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

இதை செய்வது அவசியம்

மொபைல்போன் அல்லது கம்ப்யூட்டரை, 20 நிமிடங்கள் தொடர்ந்து ஸ்கிரீனை பார்த்தால் சில நிமிடங்களாவது கண்ணுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். இரவு இருட்டில் மொபைல் போனை பார்க்க கூடாது. விளக்கை எரிய விட்டு போனை பார்க்க வேண்டும். துாங்கும் போது தலை அருகே போனை வைத்து படுக்க கூடாது. தினமும் செய்யும் பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். குழந்தைகளில் ஸ்கிரீன் நேரத்தை குறைக்க வேண்டும். குழந்தைகளை விளையாட செய்யுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us