ADDED : நவ 25, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் தீப துாணில் தீபம் ஏற்றாமல், ஹிந்துக்கள் உணர்வை மதிக்காத தமிழக அரசை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்றிரவு சாலை மறியல் நடந்தது. இதில் ஏழு பெண்கள் உள்பட பலர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலமையில் கலந்து கொண்டனர். இதேபோல் ரங்கம்பாளையத்தில், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையில் நடந்த மறியலில், பலர் பங்கேற்றனர்.
* இந்து முன்னணி சார்பில், கோபி பஸ் ஸ்டாண்ட் முன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் மணிகண்ட பிரபு முன்னிலையில் மறியல் நடந்தது. இதேபோல் கவுந்தப்பாடி நால்ரோட்டில் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
