/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே ஸ்டேஷன் எதிரே முறையாக சீரமைக்காத சாலை
/
ரயில்வே ஸ்டேஷன் எதிரே முறையாக சீரமைக்காத சாலை
ADDED : நவ 11, 2024 07:29 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிரேயுள்ள சென்னிமலை சாலையில், நெடுஞ்சாலை துறை சார்பில் விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் ஆர்ச் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் பணியை முடித்து சென்று விட்டனர். ஆனால் சரிவர சாலை அமைக்காததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை காலத்தில் மழை நீர் வழிந்தோட வசதியில்லை. இங்கு டூவீலர் ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் ஆர்ச் முன், மழை நீர் தேங்கி நிற்பதால் சாலை சரிவர தெரிவதில்லை. இதனால் நிலைதடுமாறி விழுவது சகஜமாகி வருகிறது. இந்த இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் சரிவர சாலையை செப்பனிடுவதுடன், மழை நீர் தேங்காமல் வழிந்தோட செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.