ADDED : ஆக 22, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் இணையதள சேவை இணைப்பு வேண்டும். ஆதார் எண் ஓ.டி.பி., முறையை கைவிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகிகள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.