தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 08, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 06:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு; தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக நேற்றும், ஈரோடு தாலுகா அலுவலக வளா-கத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்-தனர்.

மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 60,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல, 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் ஓய்வூ-தியம் வழங்க வேண்டும்.காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு திட்ட ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அலுவலக வளாகத்தில் ஷாமியான பந்தல் அமைத்து போராட்டத்தில்

இரவு-பகலாக ஈடுபட்டுள்ளனர். அங்கேயே காலை, மதிய, இரவு உணவை தயாரித்து சாப்பி-டுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us