/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
/
கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
ADDED : ஜூலை 02, 2025 01:12 AM
சென்னிமலை, சென்னிமலை கிழக்கு ராஜவீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா, நேற்று காலை விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து உற்சவர் நடராஜ பெருமான், தாயார் சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்கரித்து, பூஜை நடந்தது.
சென்னிமலை முருகன் கோவில் அர்ச்சகரும், ஆதி சைவ அர்ச்சகர் அறக்கட்டளை தலைவருமான மதி சிவாச்சாரியார் தலைமையிலான குருக்கள் பூஜைகள் நடத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்கிழமையான நேற்று, சஷ்டி திதியும் வந்ததால், சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பொது தரிசனத்தில் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் பஸ் இயக்கப்பட்டாலும், பெரும்பாலான பக்தர்கள் படி வழியாக சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.