ADDED : ஆக 21, 2026 05:49 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும்
விழிப்புணர்வு முகாம் நடக்க உள்ளது. ஒவ்வொரு யூனியனிலும் தலா, 18
முகாம் வீதம், 14 யூனியனில், 252 முகாம் நடக்க உள்ளது.
முகாமில்
கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான
தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை
முறை கருவூட்டல், சினை பரிசோதனை, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற
சிறு அறுவை சிகிச்சைகள், நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும்
நடவடிக்கை மற்றும் கோழிகளுக்கும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
இந்த முகாம் நாளை சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், பெரியூரில் நடக்க உள்ளது.
