ADDED : நவ 15, 2026 06:10 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:முன்னாள்
முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோட்டில் சைக்கிள்
போட்டி நேற்று நடந்தது. ஈரோடு கனி ராவுத்தர் குளம் பகுதியில் இருந்து
தொடங்கிய போட்டியை, கலெக்டர் கந்தசாமி கொடியசைத்து துவக்கி
வைத்தார்.
மாணவ, மாணவியருத்து தனித்தனியாக, 13, 15, 17 வயது என
இரு பிரிவாக தனித்தனியாக நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியர் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளிலும் முதல் மூன்று பரிசாக
முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய், நான்கு முதல் 10வது இடம்
பிடித்தவர்களுக்கு தலா, 250 ரூபாய் மற்றும் சான்றிதழ்
வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் திவ்ய நாகேஷ்வரி உட்பட
பலர் பங்கேற்றனர்.
