ADDED : செப் 16, 2026 06:43 AM
ஈரோடு:முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு ஈ.வெ.ரா., - அண்ணா நினைவகத்தில் உள்ள அண்ணாதுரை உருவச்சிலைக்கு கலெக்டர் கந்தசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேயர் நாகரத்தினம், மொடக்குறிச்சி த.வெ.க., - எம்.எல்.ஏ., சண்முகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ப.செ.பூங்கா வளாகத்தில் உள்ள அண்ணாதுரை உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் முன்னாள் எம்பி.,கள் கந்தசாமி, அந்தியூர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், நிர்வாகிகள் செந்தில்குமார், செல்லபொன்னி, அக்னி சந்துரு உட்பட பலர் பங்கேற்றனர்.* பவானிசாகர் தொகுதி த.வெ.க., சார்பில் பவானிசாகர் எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் அண்ணாதுரை உருவப்படத்துக்கு எம்.எல்.ஏ., தமிழ்செல்வி தலைமையிலான கட்சியினர், மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
