ADDED : டிச 22, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை டவுன் ஐயப்பா நகரில், ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்-கிழமை பாலாபிஷேகம் நடப்பது வழக்கம்.
இதன்படி நேற்று, 15வது ஆண்டாக பாலாபிஷேக விழா நடந்-தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்து பால் குடங்-களுடன் புறப்பட்டு, சென்னிமலை ராஜவீதிகளில் வலம் வந்து, மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, ஐயப்பா நகரில் உள்ள கோவிலுக்கு ஊர்வ-லமாக வந்தனர். அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்-டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பா-டுகளை ஸ்ரீ ஐயப்பா பக்த ஜனசபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

