/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஹிந்து மகா சபா நிர்வாகிகள் கூட்டம்
/
ஹிந்து மகா சபா நிர்வாகிகள் கூட்டம்
ADDED : டிச 22, 2025 06:08 AM

ஈரோடு,':அகில பாரத ஹிந்து மகாசபா (தமிழகம்) மாநில தலைவர் செந்தில் தலைமையில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பூர்ணசந்தி-ரனுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு நிருபர்களிடம் செந்தில் கூறியதாவது:
தமிழகத்தில் ஐந்து அமைப்புகள் ஹிந்து மகா சபா கொடியை பயன்படுத்துகின்றனர். எங்கள் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து கொள்கிறேன். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டிக்கிறோம். நீர் நிலை ஆக்ரமிப்புகள் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், ஜமாத்தினர் தர்கா, மசூதி கட்டி வழிபாடு நடத்துகின்றனர். பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த ஆக்ரமிப்புகளை தமிழக அரசு அகற்ற வேண்டும். யார் எதிர்த்தாலும் கட்டாயம் திருப்பரங்குன்றம் மலையில் தைப்பூசத்தன்று தீபம் ஏற்றுவோம். இவ்வாறு கூறினார்.

