/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கள்ளநோட்டு விவகாரம் மேலும் ஒருவர் கைது
/
கள்ளநோட்டு விவகாரம் மேலும் ஒருவர் கைது
ADDED : ஆக 13, 2025 05:20 AM
பெருந்துறை: சென்னிமலை, நாமக்கல்பாளையம் ரோட்டை சேர்ந்த துணி வியாபாரி சீனிவாசன், 55; வாரச்சந்தைகளில் கடை போட்டு வியாபாரம் செய்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பெருந்-துறை வாரச்சந்தையில் வியாபாரம் செய்தார். இரவில் வந்த ஒரு வாலிபர், 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து, ௧௦௦ ரூபாய்க்கு துணி வாங்கினார்.மீதி பணத்தை வாங்கி சென்றார். சந்தேக மடைந்த சீனிவாசன் அந்த வாலிபரை பிடித்து கேள்வி எழுப்பியபோது ஓட்டம் பிடித்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து, பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார். சந்தையில் காய்கறி வியாபாரிகள் சில-ரிடம் இதேபோல், 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து காய்-கறி வாங்கியதும் தெரிந்தது. கருர், மணமங்கலத்தை அடுத்த சோமூரை சேர்ந்த சதீஷ், 30, என்பது தெரிந்தது. கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார், 26, என்ப-வரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் மூவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.