தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பைனான்சியர் கொலையில் மேலும் ஒருவர் கைது

பைனான்சியர் கொலையில் மேலும் ஒருவர் கைது

பைனான்சியர் கொலையில் மேலும் ஒருவர் கைது


ADDED : ஜூன் 13, 2026 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 03:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டிவலசு, மோகன் குமாரமங்கலம் வீதியை சேர்ந்தவர் உதயகுமார், 44; ஈரோட்டில் சின்னமுத்து இரண்டாவது வீதியில் பைனான்ஸ் நடத்தி வந்தார். கடந்த மார்ச், 22ல் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ஈரோடு ஜி.எச்., போலீசார், கூலிப்படையை சேர்ந்த திண்டுக்கல் வேடப்பட்டி அன்பரசு, 32, உள்பட ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரித்ததில் மயிலாடுதுறை நீடூர் விஜயன், 47, கூலிப்படை தலைவனாக செயல்பட்டதும், குற்ற வழக்கில் கடலுார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. கடந்த ஏப்., மாதம் விஜயனை கஸ்டடி எடுத்து விசாரித்தபோது, கொலைக்கு உடந்தையாக இருந்த சேலம் மாவட்டம் எடப்பாடி வீராசாமி மகன் தனபால், 35, என்பவரை போலீசார் தேடி வந்தனர். தனபாலை நேற்று ஈரோடு ஜி.எச்., போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us