ADDED : ஜூன் 13, 2026 03:48 AM
அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை
அருகே குருவரெட்டியூர் செங்கோட்டை காலனியை சேர்ந்தவர், ரவி, 53;
கூலி தொழிலாளி. மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
ஓலையூர்
புலேரிக்காட்டில் ஒரு தோட்டத்தில், நேற்று காலை மரவள்ளிக்கிழங்கு
அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின் ஒயர் அறுந்து ரவி மீது
விழுந்தது. மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தவரை, சக தொழிலாளர்கள்
மீட்டு, குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு
சென்றனர்.
மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய
வந்தது. சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
