ADDED : ஜூன் 13, 2026 03:49 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி அடுத்த நல்லுாரை சேர்ந்தவர் முருகன், 72; தோட்டத்தில் வெள்ளாடு வளர்த்து வருகிறார்.
நேற்று
முன்தினம் இரவு வீட்டுக்கு சாப்பிட சென்று விட்டு மீண்டும்
தோட்டத்துக்கு வந்தபோது, இரு ஆடுகளை காணவில்லை. முருகன்
புகாரின்படி புன்செய் புளியம்பட்டி போலீசார், அப்பகுதி 'சிசிடிவி'
கேமராக்களை ஆய்வு செய்து, களவாணிகளை தேடி வருகின்றனர்.
