ADDED : ஜூன் 13, 2026 03:49 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு, ரங்கம்பாளையம்
பகுதியை சேர்ந்த அருண் மனைவி திவ்யா, 32; தம்பதிக்கு இரு குழந்தைகள்
உள்ளனர்.
ஒன்றரை ஆண்டாக கொல்லம்பாளையத்தில் தனியார் பள்ளியில்
திவ்யா ஆசிரியையாக பணி செய்து வந்தார். வீட்டு வேலைகளை பார்த்து
கொண்டு, குழந்தைகளை பராமரிப்பது, ஆசிரியர் வேலைக்கு செல்வதால் மன
உளைச்சலுக்கு ஆளானார். இதுபற்றி சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் வசிக்கும் தாயார் பழனியம்மாளிடம் அடிக்கடி தெரிவித்து வந்தார்.
நேற்று
முன்தினம் பள்ளியில் இருந்து தாயாரிடம் போனில் பேசி, மன உளைச்சலாக
இருப்பதாகவும், தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார். இதன்படி
வீட்டுக்கு திவ்யாவை அவர் அழைத்து வந்த நிலையில் சூரம்பட்டி நால்ரோடு
நோக்கி சென்றவர் காணாமல் போனார். இதுகுறித்த புகாரின்படி ஈரோடு
ஜி.எச்., போலீசார் விசாரிக்கின்றனர்.
