/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் குருநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
அந்தியூர் குருநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
அந்தியூர் குருநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
அந்தியூர் குருநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜூலை 31, 2025 01:54 AM
அந்தியூர், அந்தியூர், புதுப்பாளையம் குருநாத
சுவாமி கோவில் தேர்த் திருவிழாவுக்காக, நேற்று கொடியேற்றம் நடந்தது.
அந்தியூர், புதுப்பாளையம் குருநாத
சுவாமி கோவில் மடப்பள்ளியில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் உள்ள வனக்கோவிலுக்கு, பெருமாள், குருநாதர், காமாட்சி அம்மன் ஆகிய தெய்வங்களை சந்தன பேழையில் வைத்து, மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து, வனக்கோவிலில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். இதையடுத்து, 60 அடி உயரம் உள்ள கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சி
யில், அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆக., 6ம் தேதி முதல் வன பூஜை நடக்கிறது. 13 முதல் 16ம் தேதி வரை நான்கு நாட்கள், தேரோட்டம், குதிரை சந்தை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.