ADDED : மே 02, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:
அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், வாரச்சந்தை வணிக வளாக கட்டடம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கான ஏலம் நேற்று நடந்தது. பேரூராட்சி துணைத் தலைவர் பழனிசாமி, தலைவர் பாண்டியம்மாள் முன்னிலையில் ஏலம் நடந்தது.
இந்த ஏலத்தில், வணிக வளாக பகுதியிலுள்ள, 16 கடைகளில், 9 கடைகள் மாதம் தலா, 16,000 ரூபாய் வாடகைக்கு ஏலம் போனது. இதேபோல், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஒரு கடை, மாதம் 7,000 ரூபாய்க்கு வாடகைக்கு ஏலம் விடப்பட்டது. செயல் அலுவலர் சதாசிவம் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.