/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 11, 2024 12:21 AM
பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி ஊராட்சியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.பெருந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்-திகேயன் தலைமை வகித்தார்.
பெருந்துறை ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் உமாமகேஸ்வரன், பெத்தாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரபாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துடுப்-பதி ஊராட்சி தலைவர் கவிதா அன்பரசு வரவேற்றார். பெருந்-துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் பேரணியை துவக்கி வைத்தார். துடுப்பதி ஊராட்சி துணைத் தலைவர் சித்ரா சுப்பிரமணி, ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், காவல்துறையினர், தனியார் கல்-லுாரி மாணவ மாணவிகள் பேரணியில் பதாகைகளை ஏந்தியபடி சென்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.