ADDED : ஜூன் 25, 2026 04:27 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, போதை பொருள் தடுப்பு மற்றும்
போதை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் தீமைகள்
குறித்த விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
பள்ளிக்கல்வித்துறை
சார்பில் நடந்த பேரணியை கலெக்டர் கந்தசாமி, கொடியசைத்து துவக்கி
வைத்தார். போதை பொருட்களின் தீமைகள், இளைஞர்கள், மாணவர்களுக்கான
பாதிப்பு, அப்பழக்கத்தில் இருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை
முறையை பின்பற்றுவதற்கான வழிமுறை குறித்த துண்டு பிரசுரம்
வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது.
எஸ்.பி., கிரண் ஸ்ருதி, சி.இ.ஓ., மான்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.
