ADDED : ஜூன் 25, 2026 04:28 AM

அ நிறம் | அளவு
கோபி:கோபி,
சத்தி, தாளவாடி, நம்பியூர், அந்தியூர், பவானி ஆகிய ஆறு தாலுகாவை
உள்ளடக்கிய, கோபி வருவாய் கோட்டத்துக்கு, ராமநாதபுரம்
மாவட்டத்தில், உதவி கலெக்டராக பயிற்சி முடித்த, ஐ.ஏ.ஏஸ்., அதிகாரியான
சிவானந்தம், கோபி சப்-கலெக்டராக கடந்த 2024 செப்.,9ல்
பொறுப்பேற்றார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கு பின், த.வெ.க.,
ஆட்சி அமைந்ததால், சப்-கலெக்டர் சிவானந்தம், கடந்த, 5ம் தேதி சேலம்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா, கோபி வருவாய் கோட்ட
ஆர்.டி.ஓ.,வாக நேற்று காலை பொறுப்பேற்று கொண்டார். அவரை வருவாய்த்
துறையினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
