/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு எல்லையோர மலை கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தேடுதல் வேட்டை
/
ஈரோடு எல்லையோர மலை கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தேடுதல் வேட்டை
ஈரோடு எல்லையோர மலை கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தேடுதல் வேட்டை
ஈரோடு எல்லையோர மலை கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தேடுதல் வேட்டை
ADDED : மே 09, 2024 06:23 AM
ஈரோடு : கர்நாடகா மாநில எல்லை பகுதியில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியுள்ளது. இதையடுத்து புதிய நபர்கள் நடமாட்டம், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்து பல்வேறு பிரிவுகளாக போலீசார், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில எல்லை பகுதிகளில், தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: கர்நாடகாவில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியுள்ளது. மாநில எல்லையோரங்களில் அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா மாநில எல்லையை ஒட்டிய, ஈரோடு மாவட்ட பவானிசாகர் அடுத்த மங்களப்பட்டி கிராமம் கர்நாடகா மாநிலத்துக்கும், நீலகிரி மாவட்டத்துக்கும் எல்லைப்புற பகுதியாக உள்ளது.
இப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், 11 பேர் கொண்ட குழுவினர், இரு நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி ஆசனுார், தாளவாடி, பர்கூர், கத்திரிமலை, பாலாறு உள்ளிட்ட கர்நாடகா மாநில எல்லையோர கிராமங்கள் வழியே, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதிரடி படையினர், தனியாக வழக்கம் போல் மாநில எல்லையோர கிராமப்புற பகுதிகளில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.