/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சமூக விரோதிகளின் கூடாரமான இரவு விடுதி: ரூ.92 லட்சம் மதிப்பில் கட்டி வீணடித்த மாநகராட்சி

ADDED : பிப் 06, 2024 10:51 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட ஜவுளி நகரில், வீடில்லா ஏழை மக்கள் இரவு நேர தங்கும் விடுதி, 92 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. பணி நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், மாநகராட்சி மெத்தனத்தால் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் கட்டடத்தில் சமீப காலமாக, மாலை தொடங்கி நள்ளிரவு வரை, சமூக விரோத செயல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மது அருந்துவது, கஞ்சா அடிப்பது உள்ளிட்ட செயல் அதிகரித்துள்ளது. சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்ட கட்டடத்தை, சமுதாய கூடமாக மாற்றினால், மாநகராட்சிக்கு வருவாயாவது கிடைக்கும் என்று, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதலாவது மண்டல தலைவர் பழனிசாமி கூறியதாவது: இந்த கட்டடத்தில், சமூக விரோத செயல் நடப்பது குறித்து எனக்கும் தகவல் கிடைத்தது. எனவே கட்டடத்தை, சமுதாய கூடமாக மாற்றி கொடுக்க, கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளேன். அவரும் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை இரவு காவலர் பணியமர்த்தப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.