sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சியுடன் பஞ்.,களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு

/

மாநகராட்சியுடன் பஞ்.,களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு

மாநகராட்சியுடன் பஞ்.,களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு

மாநகராட்சியுடன் பஞ்.,களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு


ADDED : அக் 08, 2024 03:52 AM

Google News

ADDED : அக் 08, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மேட்டுநாசுவம்பாளையம், பச்சபாளி பஞ்சாயத்தை சேர்ந்த ஏரா-ளமான மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதி, ஈரோடு யூனியனுக்கு உட்பட்ட எலவமலை, மேட்டுநாசுவம்பா-ளையம், பேரோடு, பிச்சாண்டம்பாளையம், கூரப்பாளையம், கதி-ரம்பட்டி என ஆறு பஞ்சாயத்துக்களை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாயத்துக்கள் தலைவர், உறுப்பினர்களால் எளிதாக நடத்தப்ப-டுகிறது. மாநகராட்சி அதிகாரிகளால் நடத்தப்படுவதால், சிறு பிரனைக்கு கூட தீர்வு காண்பது சிரமம். மாநகராட்சி ஆகும்-போது, உள்ளாட்சி பிரதிநிதிகளின் உரிமை பறிக்கப்படுகிறது. ஒரு பஞ்சாயத்து அளவில் ஓரிரு கவுன்சிலர்கள் கூட இருக்க மாட்-டார்கள். ஒட்டுமொத்த பகுதி க்கும், அவரால் பிரச்னைகளை எதி-ரொலிக்க செய்ய இயலாது. எனவே இம்முடிவை அரசு கை விட்டு, மீண்டும் பஞ்சாயத்துக்களாகவே இப்பகுதிகள் தொடர வேண்டும். மேலும், மாநகராட்சியாக மாறும்போது வரிகள் உய ரும். நுாறுநாள் வேலை திட்டப் பணி நிறுத்தப்படும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us