/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒரே பதிவெண்ணில் 2 வாகனம் நடவடிக்கை கோரி முறையீடு
/
ஒரே பதிவெண்ணில் 2 வாகனம் நடவடிக்கை கோரி முறையீடு
ADDED : அக் 15, 2024 02:49 AM
ஈரோடு, அக். 15-
ஈரோடு, பயர் சர்வீஸ் அலுவலகம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: நான் யமஹா எப்.இசெட்., - (டி.என்.33.பி.வி.0443) பைக் வைத்துள்ளேன். எனது வாகன எண்ணை குறிப்பிட்டு, கோவையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக 'பரிவாகன்' இணைய தளம் மூலம், எனக்கு குறுஞ்செய்தி
வந்தது.
ஆனால், அது ஸ்கூட்டராகும். எனது பதிவெண் கொண்டுள்ளதால், எனக்கு அபராத ரசீது வந்துள்ளது. ஒரே எண் கொண்ட இரு வாகனம் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன், எனது பைக்குக்கு தவறாக விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

