/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு முறையீடு
/
கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு முறையீடு
ADDED : ஜூன் 24, 2025 01:18 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், சத்தியமங்கலம் தாலுகா கொமாரபாளையம், மலையடிப்புதுார் கிராமம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் வழங்கிய மனுவில் கூறியதாவது:
மலையடிபுதுாரில் வசிக்கும் எங்களுக்கு சொந்தமாக நிலம், வீடு இல்லை. தினக்கூலிகளாக கிடைக்கும் வேலையை செய்து வருகிறோம். 10 ஆண்டுக்கும் மேலாக மலையடிபுதுாரில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவசமாக வீட்டுமனை வழங்கி, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டித்தர வேண்டும். கிராமத்தில் பூமிதான நிலம் உள்ளதால், அதில் இடம் ஒதுக்கீடு செய்து வழங்கலாம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.