/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி மருத்துவ செலவுக்கு உதவக்கோரி முறையீடு
/
பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி மருத்துவ செலவுக்கு உதவக்கோரி முறையீடு
பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி மருத்துவ செலவுக்கு உதவக்கோரி முறையீடு
பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி மருத்துவ செலவுக்கு உதவக்கோரி முறையீடு
ADDED : மே 31, 2024 03:34 AM
ஈரோடு: பெயின்டிங் வேலையின்போது விழுந்து காயமடைந்தவரின் சிகிச்சை தொகையை செலுத்த உதவும்படி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்டவர் குடும்பத்தார் மற்றும் கிராமத்தினர் மனு வழங்கினர்.
ஈரோடு அருகே பேரோடு, கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவர் தனது தாய் சம்பூரணம், 62, தம்பி தமிழரசன், 29, ஆகியோருடன் வசிக்கிறார். தமிழரசனுக்கு திருமணமாகவில்லை. பெயிண்டராக பணி செய்து வருகிறார். இவரது குடும்பத்தார் வழங்கிய மனுவில் கூறியதாவது:
கடந்த, 8ல் ஈரோடு, லக்காபுரம், வி.ஐ.பி., நகர், 3ம் வீதியில் ஒரு வீட்டில் தமிழரசன் பெயிண்டிங் வேலை செய்தபோது, சன்சேடு கம்பி ஒடிந்து விழுந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வீட்டு உரிமையாளர், தனியார் மருத்துவமனையில் சேர்த்து விடும்படியும், தான் செலவுகளை செய்வதாக தெரிவித்தாராம். இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை முடிந்து, 4.86 லட்சம் ரூபாய் செலவானது.
தொகையை செலுத்தினால், தமிழரசனை வீட்டுக்கு அழைத்து வரலாம் என மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. எங்களிடம் பணம் இல்லாததாலும், வீட்டு உரிமையாளர் பணம் வழங்காததாலும், தமிழரசனை வீட்டுக்கு அழைத்து வர முடியவில்லை. மாவட்ட நிர்வாகம், அவரது மருத்துவ செலவுக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில்
தெரிவித்துள்ளனர்.