/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி லட்சுமி நகர் பைபாஸில்உயர்மட்ட பாலம் கோரி முறையீடு
/
பவானி லட்சுமி நகர் பைபாஸில்உயர்மட்ட பாலம் கோரி முறையீடு
பவானி லட்சுமி நகர் பைபாஸில்உயர்மட்ட பாலம் கோரி முறையீடு
பவானி லட்சுமி நகர் பைபாஸில்உயர்மட்ட பாலம் கோரி முறையீடு
ADDED : ஏப் 23, 2025 01:29 AM
ஈரோடு:சேலத்தில் உள்ள, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை 'நேஷனல் ைஹவே அத்தாரிட்டி ஆப் இந்தியா' திட்ட இயக்குனரிடம், ஈரோடு மாவட்டம் பவானி, லட்சுமி நகர் பகுதி மக்கள், குடியிருப்போர் நலச்சங்கம், லாரி உரிமையாளர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் மனு வழங்கினர்.
மனுவில் கூறியதாவது: சேலம் - கொச்சி என்.எச்.544 சாலை, பவானி லட்சுமி நகர் பகுதியில் கடந்து செல்கிறது.
ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் இவ்விடத்தில் நான்கு வழிச்சாலையை குறுக்காக கடந்து செல்லும் இடமாகும். இவ்வழியாக மட்டுமே பவானி நகருக்கும், ஈரோடு பகுதிக்கும் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
இச்சாலையில் கனரக வாகனங்கள், தொலைதுார பஸ்கள், கார் உள்ளிட்ட பிற வாகனங்களும் மிக வேகமாக செல்கின்றன. இவ்விடத்தில் லட்சுமி நகர் பஸ் நிறுத்தமும் உள்ளது.இதனால் சாலையை கடந்து செல்வதும், வாகனங்கள் அதிகமாக வரும்போது போக்குவரத்து ஸ்தம்பிப்பு, விபத்து
ஏற்படுகிறது. மாணவ, மாணவியர், இளைஞர்கள், பணிக்கு செல்வோர் அவசரமாக சாலையை கடக்கும்போது விபத்தை சந்திக்கின்றனர். எனவே இவ்விடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
இதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டமும், கடந்தாண்டு மிகப்பெரிய கடையடைப்பும் நடந்துள்ளது. எனவே, அவ்விடத்தில் வாகனங்கள் சாலையை கடக்கும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

