/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேட்பு மனுத்தாக்கலுக்கு அவகாசம் தேவை தேர்தலை தள்ளி வைக்கக்கோரி முறையீடு
/
வேட்பு மனுத்தாக்கலுக்கு அவகாசம் தேவை தேர்தலை தள்ளி வைக்கக்கோரி முறையீடு
வேட்பு மனுத்தாக்கலுக்கு அவகாசம் தேவை தேர்தலை தள்ளி வைக்கக்கோரி முறையீடு
வேட்பு மனுத்தாக்கலுக்கு அவகாசம் தேவை தேர்தலை தள்ளி வைக்கக்கோரி முறையீடு
ADDED : ஜன 09, 2025 07:56 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி யில், வேட்பு மனுத்தாக்கலுக்கு அவ-காசம் தேவை என, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், சமூக நீதி மக்கள் கட்சி, மாவீரன் பொல்லான் பேரவை நிறுவன தலைவர் வடிவேல் தலைமையில் மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று முன்-தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் வரும், 10 முதல், 17 வரை என அறி-வித்து, அதில், 10, 13, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய இயலும். மற்ற நாட்கள் விடுமுறை-யாக உள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறையுடன், வரும், 17 ம் தேதியை தமிழக அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.வேட்பு மனுத்-தாக்கல் செய்ய, அரசு வேலை நாட்களாக, 7 முதல், 10 நாட்கள் வழங்கலாம். மூன்று நாட்கள் மட்டுமே வாய்ப்புள்ளதை, கூடுதல் அவகாசம் வழங்கி மாற்றி அறிவிக்க வேண்டும். பொங்கல் பண்-டிகையின்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவர். இதுபற்றி, தேர்தல் ஆணையம் பரிசீலித்து, இடைத்தேர்தலை மார்ச் மாதத்தில் நடத்-தலாம். கடந்த, 2010ல் பென்னாகரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்-பட்டு, பொங்கல் பண்டிகையால் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்-டது. அதுபோன்று பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்-துள்ளார்.