/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுமை துாக்கும் தொழிலாளர் கூலி உயர்வு கோரி முறையீடு
/
சுமை துாக்கும் தொழிலாளர் கூலி உயர்வு கோரி முறையீடு
சுமை துாக்கும் தொழிலாளர் கூலி உயர்வு கோரி முறையீடு
சுமை துாக்கும் தொழிலாளர் கூலி உயர்வு கோரி முறையீடு
ADDED : செப் 30, 2025 12:50 AM
ஈரோடு, டி.என்.சி.எஸ்.சி., சுமை துாக்குவோர், மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு வழங்கி, ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் கூறியதாவது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்கள், இந்திய உணவு கழக குடோன்களில் சுமை துாக்கும் பணி செய்கிறோம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன் நிர்வாகம், 50 கிலோ மூட்டைக்கு, 1.86 ரூபாய் கூலியாக வழங்குகிறது.
இந்திய உணவு கழகத்துடன் வரும் மத்திய அரசின் உணவு குடோன்களில், 40 கிலோ மூட்டைக்கு, 9.70 முதல், 13.98 ரூபாய் வரை வழங்குகின்றனர். பொது வினியோக திட்டத்துக்க ஏற்றப்படும் மூட்டைகளுக்கு அட்டி கூலியை உயர்த்த வழங்க கோரி இரு மாதத்துக்கு முன்பே மனு வழங்கினோம். மண்டல மேலாளர் எங்களை அழைத்து பேசினார். லாரிகளில் ஒரு டன்னுக்கு, 25 ரூபாய் மட்டுமே கூலியாக தருவதால், 50 ரூபாய் வேண்டும் கேட்டோம். ஆனால் மூன்று ரூபாய் மட்டும் உயர்த்தி தருவதாக கூறி உள்ளார். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் அதிக கூலி தருகின்றனர். நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் குறைத்து வழங்குகின்றனர். இதை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.