ADDED : நவ 23, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஆசிரியர் தகுதி தேர்விற்கான
வழிகாட்டுதலில் ஆசிரியர் தகுதி தேர்வு வட்டார வள மைய ஆசிரியர்
பயிற்றுனர் மற்றும் ஆசிரியர் குழுவுடன் இருந்த அனைத்து
கருத்தாளர்களையும், ஆசிரியர் பங்கேற்பாளர்களையும் கவுரவிக்கும்
வகையில் தகுதி தேர்வு கருத்தாளர்களுக்கான பாராட்டு விழா ஈரோட்டில்
நடந்தது.
கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திர சகரன் தலைமை
வகித்தார். தருமபுரி அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர்
பிரேம்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை நாமக்கல்
மாவட்ட முதுகலை ஆசிரியர் விமல், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்
மெய்யப்பன் ஒருங்கிணைத்தனர்.
