ADDED : நவ 23, 2026 06:37 AM
அ நிறம் | அளவு
பவானி,:இலவச
ஜோதிட ஒருநாள் மாநாடு பவானியில் நேற்று நடந்தது. லட்சுமி கண்ணன்,
விஜயலட்சுமி கணேசன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
விருதுநகர் சுடலேஸ்வரர் சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஜாம்பவான் சுவாமிகள்
தலைமை வகித்தார். '
விபரீத வாஸ்து விளைவு - பணமா? பாசமா?' என்ற தலைப்பில்
பட்டிமன்றம் நடந்தது. மேலும், பன்னிரண்டாம் வீடு பயணமா? சயனமா?,
ஆறாமிடமும் அதன் சூட்சுமங்களும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்
ஜோதிட சொற்பொழிவு நடந்தது. அருள்வேந்தன் துரைசாமி, கார்த்திகேயன்,
பவளக்கண்ணன் உள்ளிட்ட ஜோதிட வல்லுநர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு,
கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோதிட
ஆர்வலர், ஆன்மிக பெரியோர் உள்பட, 500-க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.
