/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குப்பை கிடங்கில் மீட்கப்பட்ட வைர தோடு மாநகராட்சி ஊழியர்களுக்கு பாராட்டு

ADDED : செப் 22, 2024 04:13 AM
ஈரோடு: ஈரோட்டில் பொன் வீதியில், 50க்கும் மேற்பட்ட நகை கடைகள் செயல்படுகின்றன. இப்பகுதியில் செயல்படும் பிரபல நகை கடையில், 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜோடி வைர தோடு காணாமல் போனது தெரிந்தது.
தீவிர ஆய்வில் குப்பையோடு குப்பையாக சேர்த்து வீசப்பட்டிருக்கலாம் என கருதினர். இதுகுறித்து நகை கடைக்காரர் தரப்பில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் நல்லசாமியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சி துாய்மைப்பணி மேற்பார்வையாளர் விக்னேஸ்வரன், சக ஊழியர்களின் உதவியுடன் வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் ஒரு மணி நேரம் தேடினர். இதில் வைரத்தோடு கிடைத்தது. துாய்மைப்பணி மேற்பார்வையாளர் விக்னேஸ்வரன் சக ஊழியர்களுடன், வைர தோட்டை கடை ஊழியர்களிடம் ப்படைத்தார். இரவு நேரத்தில் குப்பை கிடங்கில் கிடந்த வைர நகையை மீட்டு கொடுத்த மாநகராட்சி பணியாளர்களுக்கு, கடை உரிமையாளர், ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.