ADDED : செப் 21, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் அனைத்து அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில்
பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி
அளிக்கும் வகையில், ஈரோடு காசிபாளையத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐய.யில் தேசிய
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும், 23ம் தேதி காலை, 9:00 மணி முதல்
மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மத்திய,
மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து
கொண்டு, தங்கள் நிறுவனத்தில் உள்ள தொழிற்பழகுநர்கள்
காலியிடங்களுக்கு அப்ரண்டிசஸ் தேர்ந்தெடுக்க உள்ளனர். கூடுதல்
தகவலுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 94424 94266, 77084 33777
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
