/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனம் திறக்கும் செங்கோட்டையன் அ.தி.மு.க., ஆபீஸில் ஏற்பாடு தயார்
/
மனம் திறக்கும் செங்கோட்டையன் அ.தி.மு.க., ஆபீஸில் ஏற்பாடு தயார்
மனம் திறக்கும் செங்கோட்டையன் அ.தி.மு.க., ஆபீஸில் ஏற்பாடு தயார்
மனம் திறக்கும் செங்கோட்டையன் அ.தி.மு.க., ஆபீஸில் ஏற்பாடு தயார்
ADDED : செப் 05, 2025 01:10 AM
கோபி, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், மீடியாக்களை சந்தித்து, இன்று மனம் திறந்து பேசவுள்ள நிலையில், அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடு தயாராக உள்ளது.
அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால், முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன், கோபி அருகே கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (5ம் தேதி) காலை, 9:00 மணிக்கு, மீடியாக்கள் முன்னிலையில் மனம் திறந்து பேசவுள்ளதாக அறிவித்திருந்தார். இதற்காக கோபி போலீசாரிடம் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையிலான போலீசார், கரட்டூரில் ஒரு தனியார் காம்ப்ளக்சில் செயல்படும், அ.தி.மு.க., ஈரோடு மேற்கு மாவட்ட அலுவலகம் மற்றும் கோபி எம்.எல்.ஏ., அலுவலகத்தை நேற்று மாலை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.
முன்னாள் அமைச்சர் சந்திப்பு
கோபியில் நேற்று பல்வேறு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோட்டையன், குள்ளம்பாளையம் பண்ணை வீட்டுக்கு மாலையில் வந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான ராமலிங்கம், மாலை, ௬:00 மணிக்கு பண்ணை வீட்டுக்கு வந்தார். ஒரு மணி நேரம் கழிந்த நிலையில், அவர் புறப்பட்டு சென்றார். செங்கோட்டையனை சமாதானப்படுத்த வந்தாரா அல்லது அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்தாரா என்றெல்லாம் கேள்வி எழுந்துள்ளது.