/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடப்பள்ளி-அரக்கன்கோட்டையில் 19 முதல் 'டி.பி.சி.,' திறக்க ஏற்பாடு
/
தடப்பள்ளி-அரக்கன்கோட்டையில் 19 முதல் 'டி.பி.சி.,' திறக்க ஏற்பாடு
தடப்பள்ளி-அரக்கன்கோட்டையில் 19 முதல் 'டி.பி.சி.,' திறக்க ஏற்பாடு
தடப்பள்ளி-அரக்கன்கோட்டையில் 19 முதல் 'டி.பி.சி.,' திறக்க ஏற்பாடு
ADDED : செப் 17, 2025 01:31 AM
ஈரோடு, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (டி.பி.சி.,), வரும், 19ம் தேதி முதல் திறக்க உள்ளது. நடப்பு பருவத்துக்கு தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதி விவசாயிகள் நெல்லை, கொள்முதல் செய்யும் பொருட்டு, 38 இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்படவுள்ளது.
இதன்படி காசிபாளையம், கள்ளிப்பட்டி, ஏளூர், நஞ்சை புளியம்பட்டி, புதுவள்ளியம்பாளையம், என்.ஜி.பாளையம், கரட்டடி
பாளையம், மேவாணி, புதுக்கரைப்புதுார், சவுண்டப்பூர், நஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், டி.என்.பாளையம், கூகலுார், பெருந்தழையூர், கருங்காடு உள்ளிட்ட இடங்களில் செயல்படும்.
இங்கு கிரேடு-ஏ நெல் குறைந்த பட்ச ஆதார விலை, 2,389 ரூபாய், ஊக்கத்தொகை, 156 ரூபாய் சேர்த்து, 2,545 ரூபாய்; நெல் பொது ரகம் ஆதார விலை, 2,369 ரூபாய், ஊக்கத்தொகை, 131 ரூபாய் சேர்த்து, 2,500 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும்.
வி.ஏ.ஓ., சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ-2 ஆகியவற்றுடன் விவசாசயிகள் வர வேண்டும்.
இ-பிரக்யூர்மென்ட் முறையில் பதிவு செய்து, நெல் விற்பனைக்கு எடுக்கப்படும்.