/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வன உயிரினத்தின் ஓடுகள் வைத்திருந்தவர் கைது
/
வன உயிரினத்தின் ஓடுகள் வைத்திருந்தவர் கைது
ADDED : நவ 07, 2024 01:06 AM
வன உயிரினத்தின் ஓடுகள்
வைத்திருந்தவர் கைது
டி.என்.பாளையம், நவ. 7--
டி.என்.பாளையம் அருகே வாணிப்புத்துார் பகுதியில், டீக்கடை ஒன்றில் நேற்று முன்தினம் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்றிருந்தார். டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தி, அவர் வைத்திருந்த கட்டை பையை சோதனை செய்தனர். அதில் அலங்கு என்று சொல்லக்கூடிய, எறும்பு திண்ணி என்ற அரிய வகை வன உயிரினத்தின் ஓடுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
கடம்பூர் மலை கிராமத்தை அடுத்த, மல்லியம்மன் துர்க்கம் என்ற கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி, 45, என்பவர் எறும்பு திண்ணி உயிரினத்தின் ஓடுகளை எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதன் ஓடுகள் வெளி மார்க்கெட்டில் சட்ட விரோதமாக மாந்த்ரீகம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு என்று சொல்லி, சில ஏமாற்று பேர் வழிகள் அதிக விலைக்கு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரத்தினசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.