/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் கலைவிழா
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் கலைவிழா
ADDED : மார் 11, 2025 06:48 AM
ஈரோடு: கோபி, ஒத்தகுதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் மகளிர் தின விழா மற்றும் கல்லுாரி கலைவிழா நடந்தது. பவானி எம்.எல்.ஏ.,வும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளருமான கருப்பணன் தலைமை தாங்கினார். நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியா ஜெரிமியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் கம்பத்தாட்டம், சலங்கையாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், கம்பு சுற்றுதல், கதகளி, மோகினி ஆட்டம், ராணுவத்தை போற்றும் வகையில் சிறப்பு நடனம், மேற்கத்திய நடனம் என்று பல்வேறு வகை கலை நிகழ்ச்சிகளை, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நிகழ்த்தினர்.
விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் வெங்கடாசலம், இணை செயலாளர் கெட்டிமுத்து, முதன்மை செயல் அதிகாரி கௌதம், அறங்காவலர்கள் கணேசன், கவியரசு, கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் தங்கவேல், இளங்கோ, நந்தகுமார், யுவராஜ் கருப்பணன், பிரகதீஷ்வரன், மோகனசுந்தரம், முத்துக்கண்ணு, பியூலா வயலட் தங்கம் மற்றும் துறை தலைவர், பேராசிரியர், மாணவ-மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.