/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை அருகே கலை திருவிழா போட்டி
/
சென்னிமலை அருகே கலை திருவிழா போட்டி
ADDED : நவ 17, 2024 02:24 AM
சென்னிமலை, நவ. 17-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, அனைத்து நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 6 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டி, சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூர் தனியார் கல்லுாரியில் நடந்தது.
மணல் சிற்பம், களிமண் சிற்பம், பானை ஓவியம், செதுக்கு சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், பரதநாட்டியம், வீதி நாடகம், இலக்கிய நாடகம், பொம்மலாட்டம், பறை, பம்பை, உடுக்கை, புல்லாங்குழல் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடந்தன. மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். முன்னதாக, ஈரோடு மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சிவகுமார் பேசினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.