ADDED : நவ 06, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா நடந்தது. மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
நாடகம், பரத நாட்டியம், ஓவியம், பலகுரல், நடனம், கதை கூறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டி
கள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

