ADDED : நவ 27, 2024 12:49 AM
கலை திருவிழா ஆயத்த கூட்டம்
ஈரோடு, நவ. 27-
மாநில அளவிலான கலை திருவிழா போட்டி, டிச.,5, 6ல் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் ஒன்பது, 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஈரோடு மாவட்டத்தில் ஈங்கூர் கங்கா மெட்ரிக் பள்ளி, விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பள்ளி, ஈங்கூர் இந்துஸ்தான் கலை மற்றும் வணிகவியல் கல்லுாரி, கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. இதில், 6,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பான ஆயத்த ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் சுப்பா ராவ் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மேற்பார்வையாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகள், ஆசிரியர்களை தங்க வைத்தல், போட்டி நடத்துதல், உணவு அளித்தல், மேடை அமைத்தல், ஒளி-ஒலி ஏற்பாடு குறித்து விளக்கப்பட்டது.