/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2.40 லட்சம் கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல்
/
2.40 லட்சம் கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல்
ADDED : நவ 09, 2025 04:46 AM
ஈரோடு:''ஈரோடு
மாவட்டத்தில் ஆண்டுக்கு, 2 லட்சம் முதல், 2.40 லட்சம்
கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யப்படுகிறது,'' என,
ஈரோடு மாவட்ட கால்நடை துறை துணை இயக்குனர் பிரிசில்லா மாலினி
நிக்கல்சன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் ஊட்டி, ஒசூர், ஒரத்தநாட்டில் உறை விந்து குச்சி சேமித்து
பராமரிப்பு மையம் செயல்படுகிறது. ஈரோட்டில் உறை விந்து குச்சி
சேமிப்பு மையம் செயல்படுகிறது. ஈரோடு மையத்தில், ஜெர்சி கிராஸ்,
எச்.எப்., கிராஸ் வெள்ளை, கருப்பு, பிரவுன், கருப்பு வெள்ளை, ஜெர்சி துாய
விந்து குச்சி, சிவப்பு சிந்து மற்றும் பாரம்பரிய இனமான பர்கூர்,
காங்கேயம் இன விந்துகளும் சேகரித்து, கருவூட்டலுக்கு
வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் கடந்த, 2020
கணக்கெடுப்பின்படி, 3.24 லட்சம் பசு, 82,000 எருமைகள் உள்ளன. செயற்கை
கருவூட்டல் ஆண்டுக்கு ஆண்டு சிறிது வேறுபட்டாலும், 2.10 லட்சம் முதல்,
2.40 லட்சம் கால்நடைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும்
கருவூட்டப்படுகிறது.
பர்கூர் இன மாடுகளுக்கு கருவூட்டல்
அந்தியூர், பர்கூர் உட்பட சில பகுதியில் மட்டுமே அதிகம். காங்கேயம்
இனங்களுக்கு அதிகமாக கருவூட்டப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

