/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மேல்நிலை பள்ளியில் அரும்புகள் நுாலகம்
/
மேல்நிலை பள்ளியில் அரும்புகள் நுாலகம்
ADDED : நவ 21, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர், பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி நுாலகத்தில், அரும்புகள் நுாலகம் எனும் சிறார் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி துவக்கி வைத்தார். குழந்தைகளிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் முன்னெடுப்பை சுடர் அமைப்பு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த நுாலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நுாலகத்துக்கு, சுடர் அமைப்பானது, 180 நுால்களை வழங்கியது. நிகழ்வில் மாவட்ட கல்வி ஆய்வாளர் பால்ராஜ், சுடர் அமைப்பின் இயக்குனர் நடராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, பி.டி.ஏ., தலைவர் ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
என வலியுறுத்தினர்.

