ADDED : செப் 22, 2026 03:58 AM

ஈரோடு; ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்தவர் அபுதாஹிர், 24; ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் முதலாவது பிளாட்பார்மில் மொபைல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த, 19ல் சேலத்தில் இருந்து மொபைல் போனுக்கான எட்டு பவர் பேங்குகளை வாங்கி கொண்டு ரயிலில் பொதுப்பெட்டியில் ஈரோடு வந்தார். ஈரோட்டை அடைந்த நிலையில் அவற்றை காணவில்லை. உடனடியாக புகாரின்-படி ஈரோடு ரயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பார்சல் அலுவலகம் அருகே சந்தே-கப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து விசா-ரித்தனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரை சேர்ந்த தியாகு, 43, என்பதும், பவர் பேங்குகளை திருடியதையும் ஒப்புக்-கொண்டார். அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்-தனர். பவர் பேங்குகளை பறிமுதல் செய்தனர்.
