ADDED : செப் 22, 2026 03:57 AM
ஈரோடு; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக்கடை உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம். சிறு வணிகர்கள் நலன் கருதி, முன்னதாகவே தங்கள் விற்ப-னையை துவங்க ஏதுவாக இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையம் மூலம் பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் புல வரை-படம், கிரைய பத்திரம், முகவரிக்கான ஆதாரமாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது, பாஸ்போர்ட் அளவு போட்டோ, 0070-60-103AA--22799 என்ற கணக்கு தலைப்பில் சேவை கட்டணமாக, 600 ரூபாய் செலுத்திட வேண்டும்.
அதற்கான ரசீது ஆகியவற்றை ஆவணங்க-ளுடன் இணைத்து வரும், அக்., 18 க்குள் விண்-ணப்பிக்கலாம். அதன் பின் பெறப்படும் விண்ணப்-பங்கள் ஏற்கப்படாது. விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தற்காலிக உரிமம், நிராகரிக்கப்பட்டால் அதற்-கான ஆணையையும், இணையதளம் மூலமே மனுதாரர்கள் பெறலாம்.
