ADDED : பிப் 11, 2026 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் வண்டிபேட்டையில் ஐயர்துரை வீதியை ஒட்டி, காலி வயல் வெளியில், 40 கட்டு வைக்கோல் காய்ந்த நிலையில் கிடந்தது. நேற்று காலை, 6:00 மணியளவில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.
அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 9:15 மணி வரை போராடி தீயை அணைத்தனர். எரிந்த வைக்கோலின் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என்று தெரிகிறது. வைக்கோல் போட்டு வைத்திருந்த இடத்தில் பொது கழிவறை உள்ளது. அங்கு வந்த யாரோ, அணைக்காமல் துாக்கி வீசிய பீடி அல்லது சிகரெட்டால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த குட்டி என்பவருக்கு, வைக்கோல் சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

