/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டு தேர்வு; இரண்டு மையங்களில் 434 பேர் பங்கேற்பு
/
ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டு தேர்வு; இரண்டு மையங்களில் 434 பேர் பங்கேற்பு
ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டு தேர்வு; இரண்டு மையங்களில் 434 பேர் பங்கேற்பு
ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டு தேர்வு; இரண்டு மையங்களில் 434 பேர் பங்கேற்பு
ADDED : செப் 09, 2024 06:36 AM
ஈரோடு: யு.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெற, நான் முதல்வன் திட்ட மதிப்பீட்டு தேர்வு ஈரோட்டில் இரு மையங்களில் நடந்தது.
நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவானது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து, யு.பி.எஸ்.சி., தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்விற்கு, தயாராகி வருபவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்தி, 1,000 மாணவ, -மாணவிகளை தேர்வு செய்து மாதம், 7,500 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வர்கள் ஊக்கத்தொகை மற்றும் இலவச பயிற்சி பெற, நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வானது, நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. ஈரோட்டில் அரசு தகைசால் பள்ளி, ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் நடந்தது. தேர்வு எழுத, 658 பேர் விண்ணப்பித்திருந்தனர். 224 பேர் தேர்வெழுத வரவில்லை. 434 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு எழுத வந்தவர்களின் நுழைவு சீட்டு ஆய்வு செய்யப்பட்டு, அவர்களையும் சோதனை செய்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். எழுது உபகரணங்கள், நுழைவு சீட்டு தவிர பிற பொருட்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. தேர்வு மையத்தின் முன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.