/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1,889 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் முத்துசாமி வழங்கல்
/
1,889 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் முத்துசாமி வழங்கல்
1,889 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் முத்துசாமி வழங்கல்
1,889 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் முத்துசாமி வழங்கல்
ADDED : அக் 11, 2024 01:16 AM
ஈரோடு, அக். 11-
ஈரோட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் வரவேற்றார்.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து பேசியதாவது: கடந்த ஜூலை, 11 முதல் ஆக., 30 வரை மக்களுடன் முதல்வர், குறைதீர் கூட்டம், உங்களை தேடி உங்கள் ஊரில் போன்ற நிகழ்ச்சிகளில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், 7,074 மனுக்கள் புதிய ரேஷன் கார்டு கோரி பெறப்பட்டு, 1,861 பேருக்கு இங்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. பிற தகுதியான விண்ணப்பங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு, 1,889 பயனாளிகளுக்கு, 3.16 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு பேசினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பெறப்படும் அனைத்து வகையான மனுக்கள் மீதும், நலத்திட்ட உள்ளிட்ட திட்ட பயன் கோரிய மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த முறை முதல்வர், ஈரோடு வந்தபோது, 43,000 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. பின் துணை முதல்வர் வந்தபோதும், நலத்திட்டம் வழங்கப்பட்டது. தற்போது, 1,889 பயனாளிகளுக்கு, 3.16 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு பேசினார்.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட பஞ்., தலைவர் நவமணி, மாநகராட்சி ஆணையர் மணீஷ், மாவட்ட பஞ்., துணை தலைவர் கஸ்துாரி உட்பட பலர் பங்கேற்றனர்.